அவனியில் இறையருளால்
ஆளவந்த உயர்திணையே
இனியது பேசி
ஈகை குணம் கொண்டு
உண்மை நிலை கண்டு
ஊக்கத்தை மூலதனமாக்கி
எளிய வாழ்க்கை பூண்டு
ஏற்றம் யாவும் உண்டாக
ஐயம் அற்ற மனதோடு
ஒழுக்கம் நிறைந்த வாழ்வோடு
ஓங்கி உயரும் பாங்கோடு
அவ்வையின் அறவழியில்
பாரினில் சிறப்பாய் நிலைத்து
தர்மத்தை ஈன்றெடு என்றுமதை
உயர்வாய் போற்றி காத்திடு.