ஒரு மனிதனின் சிந்தனையை வாய் எப்படி கருத்தாக மாற்றி பகிர்கிறதோ அது போல தான் உள் உனர்வின் மொழிகளை பேச்சாக மாற்றுவது இமைகளின் வேலை. அதன் ஒரு தொகுப்பு.
இமைகள் மூடினால் இறந்தகாலத்தின்
உயிரிருந்த நினைவுகள்..
அவைகள் திறந்தால்
வருங்காலத்தின் மாற்ற தொகுப்புகள்.
இதற்கிட்டையில் அது
சிமிட்டி கொண்டே இருந்தது,
பதட்டமாக வாழும் நிகழ்காலம் போல..!!
-வருண்