அம்மா உன் முகம் என்

அகம் முழுதும் நிறைந்து

அழகாய் வாழுதம்மா

நினைவாய் நித்தமும்

துணையாய் இருக்கும் அம்மா

மண்ணில் நான் உள்ளவரை

என்னுள்ளே நீதான் அம்மா

போகும் வழியில் நீ

பேசும் சொல்லில் நீ

தேடலில் நீ

பொருளில் நீ செயலில் நீ

நானாக நீ நீயாக நான்

அம்மா என்னுள்ளே நீதான் அம்மா.